காந்தி மார்க்கெட்டி பகுதியில் கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து. 5 பேர் மீது வழக்கு பதிவு.
காந்தி மார்க்கெட்டி பகுதியில்

கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து.
திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் பாண்டி (வயது 23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார் பின்னர் சகோதரர் கார்த்திக் இடமும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள மணிமண்டப சாலை பகுதியில் விஜய் பாண்டி தனது சகோதரர் சஞ்சய் பாண்டியன் உடன் சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த கார்த்திக், விஜய் பாண்டியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த விஜய் பாண்டி மற்றும் சஞ்சய் பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கல் மற்றும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில்
கார்த்திக்குக்கு முதுகிலும், மணிகண்டனுக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கார்த்திக் கொடுத்த புகார் அடிப்படையில் விஜய் பாண்டி அவரது சகோதரர் சஞ்சய் பாண்டி மற்றும் தந்தை முருகன் ஆகிய மூன்று பேர் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோன்று விஜய் பாண்டியின் தாயார் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

