Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப பலி.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …..

0

'- Advertisement -

நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

Ad banner

இறந்தவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சவகிடங்கில் வைத்து திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாந்தி விசாரணை செய்து வருகிறார்கள்.

மேற்படி நபரைப் பற்றி அடையாளம் மற்றும் முகவரி

தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 90805 63321 மற்றும் 94434 72524

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.