Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு. பிசிசிஐ அறிவிப்பு

0

'- Advertisement -

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு

Ad banner

பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :-

கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண முடியாத ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஐபிஎல் பேன் பார்க் சார்பில் இந்தியா முழுவதும் 50 நகரங்களில் பிரம்மாண்டமான திரைகளில் நேரடியாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பி ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா திரையில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அதன்படி திருச்சியில் நாளை (சனிக்கிழமை) 2ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டியை திருச்சி பிஷப் ஹபர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மெகா திரை அமைக்கப்பட்டு அதில் நேரடியாக போட்டி ஒளிபரப்ப உள்ளது. இதே போன்று நாளை மறுநாள் 3ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 2:30 மணி அளவில் சன் ரைஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை மதியம் 2:30 மணி அளவில் இருந்து நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் காணலாம்.இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 10,000 ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது போது கூறினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.