Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஏடிஎம்களில் தமிழை புறக்கணிக்கும் எஸ் பி ஐ.உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் திருச்சி சக்தி இயக்கம் மற்றும் தமிழர்கள் கோரிக்கை.

0

'- Advertisement -

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எஸ் பி ஐ ஏடிஎம் மையங்களில் முன்பு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகள் தேர்வு செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழி விருப்பம் நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Ad banner

இதனால், தமிழ் மட்டும் அறிந்த தமிழக பொதுமக்கள் பணம் எடுப்பதில் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக முதியோர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் ஏடிஎம் மையங்களில் தமிழ் மொழி கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.