யார் ஆட்சி அமைத்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாப்பு அளித்திட வேண்டும்.கார்ப்பரேட் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற மே தின விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்க தலைவர் பாலமுருகன்
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்பில் திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர்கோவில் பகுதியில் மே தினவிழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் தலைவர் திருச்சி ஓம் சக்தி பாலமுருகன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தினார். கோடை வெயிலைத் தணிக்கும் விதமாக, அங்கிருந்த பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தர்பூசணி, மோர் மற்றும் இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தின வாழ்த்துகள் கூறப்பட்டது

இந்த உழைப்பாளர் தின விழாவானது வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடாமல், உள்ள உள்ளூர் உழைப்பாளர்களின் நலன் காப்பதாக இருக்க வேண்டும் . ஓம் சக்தி பாலமுருகன் முன்வைத்து உள்ள கோரிக்கைகள் முதன்மையாக அமைந்துள்ளது
இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், உள்ளூர் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இதன் மூலமாக அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது அரசின் கடமை.
வேலைவாய்ப்புகளில் முதலில் உள்ளூர் உழைப்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு பிராந்தியம் உண்மையான வளர்ச்சியை அடையும்.
திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர் கோவில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய கருத்தாக “உள்ளூர் உழைப்பை மதிப்போம், இதனால் அவர்களின் வாழ்வை உயர்த்துவோம்” நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்க நிறுவன தலைவர் ஓம் சக்தி பாலமுருகன் அவர்கள் கூறிய போது :-தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாப்பு அளித்திட வேண்டும்..அதேபோன்று தொழில் வளர்ச்சிக்காக அயல் நாடுகளில் இருந்து முதலீடு பெறுவதை தவிர்த்து உள்ளூர் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உள்ளூர் முதலீட்டாளர்களை அழைத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி தொழில் வளத்தை பெருக்க வேண்டும். தமிழகத்தில் முற்றிலுமாக கார்ப்பரேட் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.

