சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.

விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி (திங்கள்கிழமை) வாக்குகள் எண்ணப் படுகின்றன. இந்நிலையில் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை மாறுபட்ட கணிப்புகள் வந்துள்ளனர். இதனால் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் சிலர் சந்தேகத்திலும் உள்ளனர்.ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக சில தலைவர்கள் ஆன்மீக சுற்றுப்பயணத்திலும் இறங்கி உள்ளனர். அந்த வகையில் இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகமும் போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என்று அந்த கட்சியின் நிறுவனர் விஜயும், அவரது கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி
த.வெ.க. தலைவர் விஜய் தற்போது கோயில் கோயிலாக சென்று வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று மும்மத வழிபாடு செய்தார்.சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார்.தற்பொழுது விஜயின் அடுத்த கட்ட ஆன்மீக பயணம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிபேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக விஜய் நாளை 2ந்தேதி காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி வருகை தந்து பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நாகைக்கு சென்று விஜய் அங்கு நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு செய்து விட்டு பிறகு மீண்டும் வேளாங்கண்ணியிலிருந்து கார் மூலம் திருச்சி வந்து விஜய் மீண்டும் தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து சென்னை செல்வதாக இருந்தது.என் நிலையில் திடீரென்று திருச்சி வருகை ரத்து செய்யப்பட்டு நாளைவிடிய காலை 2 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கடலூர் வழியாக நாகை செல்கிறார் விடியற்காலை 4.30 மணி அளவில் நாகூர் தர்காவில் வழிபாடு செய்து விட்டு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் கார் மூலம் அதே வழியாக சென்னை செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் நாளை நாகைக்கு பயணம் செய்வது தொடர்ந்து தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

