திருச்சி சுப்பிரமணியபுரம்

வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் தாண்டி அரசியல் கட்சி முகவர்கள் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பூத் சிலிப்புகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர், அப்போது திமுகவினர் கட்சி துண்டுகள் அணிந்து அதிமுகவினர் பூத் ஸ்லிப் வழங்குவதாக போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே விஜய் கட்சியினரும் அதே போன்று செயல்பட்டதாக தெரிகிறது.
அப்போது போலீசார் அதிமுகவினரை தடுத்ததாக கூறப்பட்டது.
அதற்கு அவர்கள் போலீஸ் உயர் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவினரும் கட்சிக்கொடி கட்சித் துண்டு வைத்துள்ளனர்.இதில் பாரபட்சம் காட்டாமல் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுப்ரமணியபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

