Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான அளித்த டாக்டர் விஜயகுமார் திமுக அமைச்சர் நேருவை வைத்து திறப்பு விழா நடத்தியது ஏன்?

0

'- Advertisement -

 

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவர சில தினங்கள் மட்டுமே உள்ளது.

திருச்சி மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் விருப்பம் மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் .விஜயகுமார் போட்டியிட விருப்ப மனு அளித்து உள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு மனப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

(மணப்பாறையில் உள்ள முக்கிய எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் P.L. விஜயகுமார் (MBBS, MS, Mch – Ortho) ஆவார். இவர் மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் உரிமையாளர் ஆவார். )

 

தற்போது தனது மருத்துவமனையில் புதிய பிரிவு திறப்பு விழாவிற்கு திமுக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

அதிமுக சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமான அளித்து உள்ள நபர் திமுக அமைச்சர் நேரு மற்றும் நிர்வாகிகளை வைத்து திறப்பு விழா நிகழ்ச்சி நடத்தி இருப்பது திருச்சி மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் மீறி திருச்சி மணப்பாறை தொகுதியில் இவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்து எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதியை இழப்பாரா?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.