நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த ஒத்தக்கடை செந்தில் கோரிக்கை.
நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழஉறுப்பினரும்,பீம நகர் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலரும்,அதிமுக முன்னாள் ஜங்ஷன் தொகுதி பொருளாளர் மாநாடு அதிமுக ஜங்ஷன் பகுதி முன்னாள் பொருளாளருமான ஒத்தக்கடை செந்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்:-
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்த பின்பு முதன் முதலில் மாநாடு நடத்தியது திருச்சியில் தான்.அதேபோன்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின் நடத்திய முதல் மாநாடு திருச்சியில் தான்.அரசியல் மாற்றத்திற்காக 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி ஜிகார்னரில் நடத்திய மாபெரும் மாநாடால் 10 வருடங்கள் அதிமுக ஆட்சி நடத்தியது.
இன்று புரட்சித்தாய் சின்னம்மா சசிகலா அவர்கள் இன்று அண்ணா,எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் சமாதிகளில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாளை தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான புதிய இயக்கம் தொடங்குகிறார்.
சின்னம்மா சசிகலா அவர்களுக்கு எனது சிறிய கோரிக்கை,நம் தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் தாங்களும் திருச்சியில் மாபெரும் மாநில மாநாட்டை நடத்தி பல்வேறு கட்சிகளில் பிரிந்து இருக்கும் நமது தொண்டர்களை ஒன்று இணைத்து எங்கள் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திருச்சி ஒத்தக்கடை செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

