Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.திருச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.

0

'- Advertisement -

தமிழகம் முழுவதும்  பிப் 6ந் தேதி  ரூ.360 கோடி செலவில்  பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.

முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத், மண்டல தலைவர் மதிவாணன், அரசு மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

பிறகு பிறகு அமைச்சர் மா சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

இந்தியாவிலேயே முதல்முறையாக 14 வயது பெண்களுக்கு (ஹெச் பி) வி ஹுமன் பாபிலோனா வைரஸ் தடுப்பூசி தமிழ்நாட்டில் தான் செலுத்தப்படவுள்ளது இதை நம் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார் இது ஒரு சிறப்பான திட்டமாகும் பெண்களை காக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்துள்ளது. அதேபோல கிண்டியில் பல்லோக்கு மருத்துவமனையில் பிரத்தியேக குழந்தைகள் சிறப்பு மருத்துவ பிரிவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ரூபாய் 417 கோடியில் இந்த சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவமனை பிரம்மாண்டமாக செயல்பட உள்ளது ஒன்றரை ஆண்டுகளில் இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மகத்துவமான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். பெருநகர சென்னையில் 15 மருத்துவ முகாம் மற்றும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் மாநகராட்சிகளில் நான்கு மருத்துவ முகாம் மற்றும் 10 லட்சத்திற்கும் கீழுள்ள பகுதிகளில் மூன்று முகாம்கள் என மொத்தமாக 1256 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் என முதல்வர் அறிவித்தார் தற்போது வரை 1076 முகாம்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது மற்ற மருத்துவ முகாம்களை போல் பேரளவில் மட்டுமில்லாமல் உயர்தர சிகிச்சைகள் இந்த மருத்துவ முகாம் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள முகாம்களும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் தற்பாது வரை இந்த முகாம் வாயிலாக 14 லட்சத்து 16 ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக ஏறத்தாழ ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த முகாம் வாயிலாக பயனடைந்துள்ளனர் மேலும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பீட்டு திட்டத்தில் இந்த முகாமாயிலாக இணைக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழும் இந்த முகாம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது சுமார் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதன் வாயிலாக சான்றிதழ் பெற்றுள்ளனர்

 

இந்த மருத்துவ முகாம் வாயிலாக சுமார் 17 மருத்துவ பிரிவு சார்பில் உயர்தர மருத்துவ சிகிச்சை மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகளவிலான இந்த முகாம் வாயிலாக பயன் பெற்றுள்ளனர் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 46 முகாம்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 35 முகாம் நடைபெற்றுள்ளது அதன் வாயிலாக திருச்சி மாவட்டத்தில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர். கழக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது குறிப்பாக 17 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் இருந்தது தற்போது கூடுதலாக 19 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் கட்டுவதற்கும் அதற்கு இணையான ஆறு மருத்துவமனைகள் கட்டுவதற்கும் ஆயிரத்தி எழுபத்தி எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி ஆறாம் தேதி தமிழ்நாடு முதல்வர் 7 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார் அதேபோல தமிழ்நாட்டின் உள்ள 23 ஊர்களில் ரூபாய் நான்கு கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார்

அதேபோல பல்வேறு ஊர்களில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையங்களையும் திறந்து வைக்கிறார் 10 கோடி மதிப்பில் கிண்டியில் நுண்ணுயிரியல் உணவு பகுப்பாய்வு ஆராய்ச்சி மையத்தையும் மதுரையில் ஒரு ஆராய்ச்சி மையம் என அன்று மட்டும் ரூபாய் 360 கோடியில் முதல்வர் பல்வேறு மருத்துவ தறை சார்ந்த கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியில் ரூபாய் 135 கோடி செலவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது சென்னை மதுரை தஞ்சை போன்ற பகுதிகளில் மட்டும் இருந்த புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் தற்போது ரூபாய் ஒன்பது கோடி செலவில் திருச்சியிலும் அமைக்கப்பட்டுள்ளது புதிய கட்டிடம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் ஆகியவை அதிகபட்சமாக மூன்று வாரத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.