மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை .
நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்தவர் ஜெயந்தி (வயது 36) இவரது கணவர் விஜயன் இவர்களுக்கு மகன் இரண்டு மகள்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயந்தி கணவனை பிரிந்து மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.
இவர் அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனது மூத்த மகள் ஷாலினி, இளைய மகள் கிருஷ்மிளா ஆகியோருடன் இருந்த பொழுது இளைய மகள் கிருஷ்மிளா தலை முடிக்கு கலரிங் செய்து உள்ளார் இதனை ஜெயந்தி கண்டித்துள்ளார் இதனால் கோபமான இளைய மகள் கிருஷ்மிளா வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளிவிட்டார். விட்டு உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி கதவை சாத்திக்கொண்டு வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தனது சுடிதாரின் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கியவர் உயிருக்கு போராடியபடி கத்தி உள்ளார். சத்தம் கேட்டு மகள்கள் இருவரும் அருகில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மா ஜெயந்தி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

அலறி துடித்த மகள்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தூக்கில் தொங்கிய ஜெயந்தியை இறக்கி அருகிலுள்ள நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கட்ட சிகிச்சை பின்னர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் போனார். இது குறித்து அவரது மூத்த மகள் ஷாலினி (வயது 18) நவல்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஜெயந்தி இறந்த தகவல் அறிந்த அதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஜெயந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கடிதம் வெளியிட்டு உள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினரிடத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

