இன்றைய ராசிப்பலன் – 28.05.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தினரால் நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தாராள தன வரவும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் புதிய மாற்றங்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.