இன்று மாலை திருச்சி ஆலம்தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலய கொடி இறக்கம் .
நேற்று தேர் பவானியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
திருச்சி காஜாப்பேட்டை முதலியார்சத்திரம் அருகில் உள்ள ஆலம்தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி தேர் பவனி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் பின்பு பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்பணி சவரிராஜ் அடிகளும், உதவி பங்குத்தந்தை அருட்பணி சகாய ஆண்டோ ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலிக்கு பிறகு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தினமும் மாலை 6மணிக்கு சிறப்பு நவநாள் மன்றாட்டும், பின்னர் மறையுடன் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
நவநாள் திருப்பலியை அருள்தந்தையர்கள் யூஜின், ஆரோக்கியசாமி, விஜய் பிலேவேந்தர், ஜோஜோ லாரன்ஸ், பேரருட்பணி அந்துவான் முதன்மை குரு, பிரான்சிஸ் செலஸ்டின், சகாய ஆண்டோ மற்றும் ஜேசுராஜ் ஆகிய அருட்பணியாளர்கள் நிறைவேற்றினார்கள். நேற்று இரவு தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பேராலய அதிபர் பங்குத்தந்தை அருட்பணி சவரிராஜ் புனிதம் செய்யப்பட்டு தேர் பவனி நகர்வலம் வந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஆடம்பரத் திருப்பலி – கொடியிறக்கம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருவிழா ஆடம்பரத் திருப்பலியை திருச்சி புனித வளனார் கல்லூரி, கல்வி நிறுவனங்களின் அதிபர் பேரருள் தந்தை முனைவர். பவுல்ராஜ் மைக்கேல் அடிகளார் திருப்பலி நிகழ்த்தி, திருக்கொடியை இறக்கி திருவிழாவை நிறைவு செய்து வைக்கிறார்.
பிறகு அன்னதானம் நடைபெறுகிறது. இதையடுத்து வருகிற அக்டோபர் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், பின்னர் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் நிர்வாகத்தலைவர் பீட்டர், செயலர் பேசில் இருதயராஜ், பொருளாளர் அருண் செபாஸ்டியன் மற்றும் நிர்வாகிகள் சாலமன் ரீகன், அந்தோணிலூயிஸ், அந்தோணி குணாளன், சிரில் தினேஷ், கிளமெண்ட், பாலா, மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் இயக்கம், அன்பியங்கள், ஆலய பணிக்குழு, மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

