Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 53 வது வார்டில் ஆக்கிரமிப்பு : ஜாதி ரீதியாக பேசும் மேயர் அன்பழகன், கண்டுகொள்ளாத கலெக்சன் கவுன்சிலர் கலைச்செல்வி. பணம் பெற்றுக் கொண்டு ஆதரவளிக்கும் செயற்பொறியாளர் ராஜா .

0

'- Advertisement -

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் தெரிவித்துள்ளதாவது :-

 

Ad banner

கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மனு ஒன்று அளித்தேன், அதில் எங்கள் தெருவில் 100 வீடுகள் உள்ளது. பொது நடைபாதையை அடைத்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. சாக்கடை அடைப்பினால் கொசுக்கள் மூலம் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. அகவே நான் ஏற்கனவே கடந்த ஆண்டு எங்கள் இடுகாடு ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தங்களிடம் மனு கொடுத்தேன். அதன் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்து சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுத்தீர்கள். அதற்காக என் சார்பிலும் எங்கள் தெருவாசிகள் சார்பாகவும் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். அதுபோல் இந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றி தெருவாசிகள் சுகாதாரமாகவும், நோய்நொடி வராமலும் எங்களை பாதுகாத்து கொடுக்கும்படி தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே எங்களது பொது பைப்பில் சாக்கடை கலந்து நீர் வந்தது. பல மாதங்களாக நாங்கள் அதைதான் அருந்தி வந்தோம். ஒரு மாதத்திற்கு முன்பு தான் அதை சரிசெய்து கொடுத்தார்கள். அதற்கு காரணம் ஆக்கிரமிப்பு . அதை சரிசெய்வதற்கு மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் .

 

எங்கள் தெருவில் மாநகராட்சி சார்பாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருபுறமும் சாக்கடை அமைத்து கொடுத்தார்கள். அதற்கு பிறகு எந்தவொரு மராமத்தும் செய்யப்படவில்லை. அதனால் தான் இந்த ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்து விட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தெருவில் யாராவது இறந்தால் கூட இந்த ஆக்கிரமிப்புகளினால் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை இருக்கிறது.

 

ஆகவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, எங்களுக்கு நிரந்தர தீர்வு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தேன் .

 

இதற்கு மாநகராட்சி சார்பில் திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. வார்டுகுழு அலுவலகம்.IV. வார்டு எண்.53க்குட்பட்ட கீழப்பள்ள தெரு, பீமநகர் பகுதியில் ஆக்கிரமிப்பு, சாக்கடை மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற கோரப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடம் நேராய்வு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பின் அளவீடுகள் அறிய இயலவில்லை. மேலும், அனைத்து வீடுகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே, கீழ பள்ளத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறியீடு செய்து தரக்கோரி நகரசார் ஆய்வாளர் அவர்களிடம் குறிப்பு கோரப்பட்டுள்ளது. குறிப்பு பெற்று ஆக்கிரமிப்புகள் இருப்பின் அகற்றுவதற்கு மேல்நடவடிக்கை தொடரப்படும் எனக் கூறப்பட்டிருந்தது ஆனால் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . நேரிடும் இரண்டு முறை மனு கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை .

 

நேரிடும் நேரில் சென்று கேட்டபோது ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டு உள்ளவன் உன் ஜாதிக்காரன் தானே விட்டு விட்டுப் போ என ஜாதியை வைத்து பேசுகிறார்.

 

எங்களது வார்டு 53.கவுன்சிலர் கலைச்செல்வி இவர் கலெக்ஷன் கலைச்செல்வி. எங்களது பகுதியில் தள்ளுவண்டியில் யாராவது கடை போட்டிருந்தால் மாமுல் வாங்க தினம் வந்திருப்பார் , சாக்கடைகளை அள்ள வேண்டும், தூய்மை பணி மேம்படுத்த வேண்டும் என்பதால் எங்கள் பகுதியை கண்டு கொள்வதே இல்லை . அப்படியே வந்தாலும் சுற்றி பார்த்துவிட்டு சென்றுவிடுவார் .

 

செயற்பொறியாளர் ராஜா வந்தார் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காட்டினேன் . அவர்களிடம் சென்று பேசினார் கட்டிங்கை வாங்கினால் இன்னும் ஒரு அடி வேண்டுமானாலும் வெளியே இழுத்து கட்டிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார் .

இப்படி மக்களைக் காக்க வேண்டிய யாருமே கண்டு கொள்ளாமல் உள்ளதால் எங்கள் தெருவுக்கு வர வேண்டிய ஆறு பாதைகளில் ஐந்து பாதை ஆக்கிரமிப்புகளால் குறுகி இருசக்கர வாகனம் கூட எங்கள் தெருவுக்குள் நுழைய முடியவில்லை . மிச்சம் ஒரு பாதை மட்டுமே உள்ளது அதுவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் எந்த வழியும் இல்லை .

 

இதனால் சாக்கடைகள் தூர்வார முடியாமல் கொசுக்கள் மூலம் நோய் பரவி எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரும் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

 

நானும் திமுக காரன் தான் என்ன செய்வது என தெரியவில்லை . நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தான் இதில் தலையிட்டு முறையன நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.