இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்பு .
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்
டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட கிளை சார்பில், தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மெட்ரோ சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மண்டலச் செயலாளர் காளிதாஸ்,
செயலாளர் சிவச்செல்வன்,
மணப்பாறை செயலாளர் அன்புச்செல்வன், கிழக்குக் கோட்டச் செயலாளர் மணி ஆகியோர் பேசினர்.
இதில் நிர்வாகிகள் தனராஜ், பாண்டியன், துறையூர் சிவராஜ் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

