
திருவரங்கத்தில் பரிதாபம்
குளியல் அறையில்
ஜேசிபி டிரைவர்
தூக்கு போட்டு தற்கொலை .
திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25) ஜேசிபி டிரைவர்.
இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம்.
தீராத வயிற்று வலிக்காக பலமுறை சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என தெரிகிறது .
இதையடுத்து மகேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையில் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

