Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் .

0

'- Advertisement -

 

Ad banner

ஸ்ரீங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் .

ஸ்ரீரங்கம் கீழவாசல் கீரைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 31)
இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு விஷ்ணு வர்த்தினி என்ற மனைவி உள்ளார் . இவர்களுக்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிறது.

இதுவரை இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை.

சரவணன் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை என கூறப்படுகிறது .

இது குறித்து அவரது மனைவி விஷ்ணுவர்தினி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.