திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம்.

திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம்.
ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:-
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65) தொழிலதிபரானா இவர் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருச்சி கருமண்டபம் அருகே உள்ள பொன் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் சொந்தமாக வீடு உள்ளது.
இந்நிலையில் உறவினர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த காரணத்தால் அவருடைய இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சண்முகம் குடும்பத்துடன்
வீட்டை பூட்டிவிட்டு ஒரத்தநாடு சென்றுவிட்டார். இந்நிலையில்
பங்களாவிற்கு வெளியே காவலாளி வீட்டை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கொள்ளை கும்பல் சிலர் வீட்டுக்குள் கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி
அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தாக கூறப்படுகிறது. ஆனால் கொள்ளை கும்பல் காவலாளியை தாக்கி அவரது இரண்டு கை, கால்களை கயிற்றால் கட்டி விட்டு ஓரமாக அமர வைத்துவிட்டு அங்கிருந்து சென்று வீட்டின் உள்ளே சென்றனர். விட்டின் அறையில் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து நகை பணத்தை திருடி சென்று உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு வந்த சண்முகத்தின் மனைவி காவலாளி வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு உள்ளே சென்று காவலாளியை தேடினார்.அப்பொழுது காவலாளி ஒரு இடத்தில் படுத்த நிலையில்
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி மயங்கி விழுந்து கிடந்தார்.
இதை அடுத்து அந்த காவலாளியை அவர் எழுப்பியுள்ளார்.
பிறகு எழுந்த காவலாளி நள்ளிரவு நடந்தகொள்ளை சம்பவத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சண்முகத்தின் மனைவி உடனடியாக
ஒரத்தநாட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதற்கிடையில் ஒரத்தநாட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் தெரிந்து அவர் வீட்டிற்கு உடனடியாக விரைந்துள்ளார்.வீட்டில் இருந்த நகை பணம் எவ்வளவு திருட்டு போனது என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.இந்த கொள்ளை சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் காவலாளி உள்ள வீட்டிலேயே கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொன்நகர் பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

