திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் பஸ் மோதி பரிதாப பலி.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி முத்தரசநல்லூர் ரங்கா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 70) முன்னாள் ராணுவ வீரர். இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிந்தாமணி அண்ணா சிலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணா சிலை அருகே வளைவில் வளையும் போது ஒரு பஸ் இவர் மீது மோதியது .இதில் கீழே விழுந்த அவர் மீது பஸ் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
.இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பஸ் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடந்து வருகிறது.

