Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மென்பொருள் நிறுவனங்கள் கொண்டு வருவேன். திருச்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன்

0

'- Advertisement -

 

Ad banner

இளைஞா்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டு வருவேன் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளா் ப.செந்தில்நாதன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா் செந்தில்நாதன் அறிமுகக் கூட்டம், செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற செந்தில்நாதன் பேசியதாவது:

நான் வெற்றி பெற்றால் திருச்சி தொகுதி இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டு வருவேன். கூட்டணி கட்சி தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் அனைவரையும் நான் கேட்டுகொள்வது ஒன்று மட்டும்தான். மோடியின் வெற்றிச் சின்னமாம் குக்கா் சின்னத்தை மக்களிடம் சேர்த்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் அமமுகவை சேர்ந்த சார்பாக சாருபால தொண்டைமான், தொட்டியம் ராஜசேகரன், பெஸ்ட் பாபு, கல்நாயக் சதீஷ் , பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஓபிஎஸ் அணியை சேர்ந்த வெல்லமண்டி நடராஜன், சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.