Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி விட்டு பைக், செல்போனை பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி பைக், செல்போன் பறிப்பு.

TVK ad

மதுரை முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 30). இவர் சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது நண்பர் விஷால் என்பவர் உடன் என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் கம்பெனிக்கு அருகாமையில் உள்ள டீக்கடைக்கு சென்றனர்.

பின்னர் டீ குடித்துவிட்டு இருவரும் கம்பெனிக்கு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர்.
பின்னர் இருண்டு பேரையும் கத்தியால் குத்தி விட்டு அவர்களின் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுரேந்தர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.