
திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பிணமாக கிடந்த பெண் சிசுவை வீசி சென்றது யார் ? கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை .
திருச்சி பெரிய கடைவீதி பகுதி திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் .
அப்பொழுது சாக்கடையில் பிறந்த குழந்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் உடனடியாக கோட்டைகாவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் … தகவல் அறிந்து கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கடையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் இறந்து கிடந்த
குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த குழந்தையை சாக்கடையில் தூக்கி வீசி சென்ற மர்ம ஆசாமி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து சிசுவை வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர். சாக்கடையில் பிறந்த சில மணி நேரமான குழந்தை இறந்த நிலையில் கிடந்தது அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

