
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெயிண்டர் ஒருவர், திடீரென வினோதமாக அங்கும் இங்குமாக தாவி ஓடிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் ஓடிய விதத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருச்சியைச் சேர்ந்த சுமார் 45 வயதுடைய ஒருவர் காரைக்காலில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது
அவர் ஓடிய விதத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருச்சியைச் சேர்ந்த சுமார் 45 வயதுடைய ஒருவர் காரைக்காலில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊர்தி மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் அவசர ஊர்தியில் இருந்து கீழே இறங்கிய அந்த நபர், திடீரென அங்கும் இங்குமாக தாவியபடி ஓடத் தொடங்கியுள்ளார். அவரது நடவடிக்கையை கண்டு அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.அப்போது மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது.அந்த நபரும் நாயும் அருகருகே இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியை தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
காரைக்கால் பகுதியில் நாய் கடித்து சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அந்த நபருக்கும் நாய் கடித்ததால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், அவர் ஏற்கனவே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதால், அவரது வித்தியாசமான நடத்தைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெளிவாகவில்லை.இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னரே அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்த காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.

