Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் மனு

0

'- Advertisement -

Ad banner

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில்,மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகள் திருச்சி பாராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்,துணை போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவெறும்பூர், பாய்லர், துவாக்குடி போன்ற ஊர்களுக்கு பல்வேறு டவுன் பஸ்கள் பொதுமக்களை ஏற்றிச்செல்கின்றன. அப்படி போகும் தனியார் பஸ்கள் அரியமங்கலம் எஸ். ஜ. டி.பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவார்கள். அதற்கு அடுத்த நிறுத்தமான ரைஸ்மில் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட மறுக்கிறார்கள். ஆனால் அரசு பேருந்துகள் ரைஸ்மில் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றன.

திருவெறும்பூர் மார்க்கமாக செல்லும்போது பயணிகளை இறக்க மறுக்கும் தனியார் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் சத்திரம் பஸ் நிலையம் செல்லும்போது மட்டும் ரைஸ்மில் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கியும் ஏற்றியும் செல்கிறார்கள்.

எனவே திருவெறும்பூர் மார்க்கமாக போகும் தனியார் பஸ்கள் ரைஸ்மில் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கவும் ஏற்றவும் ஆணையிடுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது ..

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் , மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், மாநகர் மாவட்ட தலைவர் ஜாகீர்கான், இப்ராகிம் ஆகியோர் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.