Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணியுடன் கள்ளக்காதல். கணவனையும் 2 வயது குழந்தையும் மீட்டு தர மனைவி அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தற்கொலை முயற்சி.

0

'- Advertisement -

 

Ad banner

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். உள்ளூரில் பெண் கிடைக்காததால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த உறவினர் நந்தினியை வரவழைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் மணிகண்டன் – நந்தினி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு, வேலைக்கு சென்றிருந்த நந்தினி வீடு திரும்பியது போது, தனது 2 வயது குழந்தை காணாமல் போயிருந்தது. மூத்த மகளிடம் கேட்ட பொழுது அப்பா கடைக்கு கூட்டிச் சென்றுள்ளதாக கூறவே, கடைக்கு தான் சென்று உள்ளார்கள் திரும்பி வந்து விடுவார்கள் என நந்தினி நினைத்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கணவனும் குழந்தையும் திரும்ப வராததால் பதறிப்போன நந்தினி, அக்கம் பக்கம் முழுக்க தேடியுள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் மணியின் சொந்த ஊரான வடலூரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நந்தினி போன் செய்துள்ளார். அப்போது ஊரில் உள்ள மணிகண்டனின் உடன் பிறந்த அண்ணன் மனைவியான விஜியும் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. எங்கையோ இடிக்கிறதே என யோசித்த உறவினர்களுக்கு ஒருகட்டத்தில் எல்லாம் வெட்ட வெளிச்சமானது.

வேலை நிமித்தமாக அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்த மணிகண்டன், அண்ணி விஜியுடன் நெருங்கிப் பழகி உள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

மணிகண்டன் தனது மனைவி நந்தினியையும், விஜி தனது கணவனையும் விட்டு பிரிந்து ஊரை விட்டு ஓட திட்டமிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக வாழ நினைத்து மணி தனது இரண்டாவது குழந்தையைத் தூக்கிக்கொண்டு விஜியுடன் ரயில் ஏறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவனையும், குழந்தையையும் மீட்டு தரக்கோரி ஆவடி காவல் நிலையத்தில் நந்தினி புகாரளித்துள்ளார். 5 நாட்களாகியும் இதுவரை குழந்தை கிடைக்காததால், நந்தினி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.

காவல் நிலையம் சென்று புகார் அளித்தால் அலட்சியமாக பார்த்துவிட்டு குழந்தையை கண்டுபிடிப்பதில் காலதாமதம் செய்வதாக நந்தினி குற்றச்சாட்டி உள்ளார். தலைமறைவாக உள்ள மணிகண்டன் பிடிபட்டால் மட்டுமே நீடிக்கும் மர்மத்தில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.