புள்ளம்பாடியில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.


அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், புள்ளம்பாடி பேரூர் கழக உட்பட்ட பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் தலைமையில்
பூத் கமிட்டி அமைத்தல், பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர் – இளம்பெண்கள் பாசறை ஆகியவை அமைப்பது குறித்து கலந்தாய்வு புள்ளம்பாடி பேரூர் கழக திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புள்ளம்பாடி பேரூர் கழகச் செயலாளர் ஜேக்கப், மாவட்ட கழக அவைத் தலைவர் அருணகிரி, அவைத் தலைவர் தாவீது, துணைச் செயலாளர் தீபா சுப்பிரமணியன், கவுன்சிலர் தியாகராஜன், ராஜா ராஜசேகரன், பொருளாளர் ஜோஸ் நிமிலன, தகவல் தொழில்நுட்பு பிரிவு துணைத் தலைவர் T.தினேஷ் ராஜா, தொழில்நுட்ப பிரிவு நகரக் செயலாளர் பாஸ்கர், லால்குடி S.S. விக்னேஷ், லால்குடி பிரசன்னா ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் பூத்க்கமிட்டி பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

