Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி முன்னிலையில் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் இந்திரா கணேசன் கல்லூரி தலைவர், அமமுகவினர். ரஜினி ரசிகர்கள் என ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்.

0

'- Advertisement -

 

Ad banner

அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையேற்று,

கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில்

TVK ad

அமமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தஞ்சை குணா, ரஜினி ரசிகர் மன்ற மலைக்கோட்டை பகுதி செயலாளர் சுரேஷ், இந்திரா கணேசன் கல்லூரிகளின் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், இன்ஜினியர் இப்ராஹிம்ஷா, சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.