திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி,ந. நடராஜன் அவர்களின் அறிக்கை.
நம் நெஞ்சங்களில் வாழும் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-ம் ஆண்டு பிறந்த நாள் விழா வருகின்ற
17.01.2021-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில்
திருச்சி கோர்ட் அருகிலுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர், மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள் வர்த்தக அணி , கலை பிரிவு நிர்வாகிகள்.
Ex.கோட்டத் தலைவர்கள், Ex உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறன்,
என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.