அதிமுக நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழா.
தமிழக முதல்வரும் கழக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி,
தமிழக துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) அன்று காலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட BHEL ATP மைதானத்தில் காலை 10 மணிக்கும்
மணப்பாறை காரை குளத்தில் காலை 11 மணிக்கும்
அதைத்தொடர்ந்து லால்குடியில் உள்ள பகுதிகளிலும் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
மேலும் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, பேரூர், வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி ஏழை-எளிய, ஆதரவற்ற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதனைத் தொடர்ந்து மேல கல்கண்டார் கோட்டையில் எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்பு பொதுக் கூட்டம் வருகின்ற செவ்வாய்க்கிழமை (19.01.2021) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திரைப்பட நடிகர் மனோஜ் குமார், ஆரணி K. அன்பழகன், கே.சி. பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த அனைத்து நிகழ்வுகளிலும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.