Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை நடைபெற உள்ள அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெறும் அதிமுக கழகத்தின் 53வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

TVK ad

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க. அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அறிவுறுத்தலின்படி நாளை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 20ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக
கட்சியின் 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும்,
நாகப்பட்டினம் மாவட்ட செயலாளருமான
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும் கட்சி செய்தி தொடர்பாளர்
ஜவஹர் அலி, முன்னாள் அமைச்சர்
பாலசுப்பிரமணியன், திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன்
மற்றும் கழக அமைப்புச் செயலாளர்
ரத்தினவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மாநில நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.