திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச்செயலாளர்,
முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
வருகின்ற 17.1.2021ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முன்னாள் முதலமைச்சர், கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார், தமிழக துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,
தமிழக முன்னாள் முதல்வர் கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த நாளையொட்டி, வருகின்ற 17.1.2021-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலுள்ள கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலை மற்றும் அவரது திருவுருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்குவதுடன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள். முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, கலைப்பிரிவு, கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்குவதுடன், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.