காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் மாபியா ஒருவரின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத மிகப்பெரிய அளவிலான ரொக்கமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.டெல்லி நரேலா பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பார்வதி என்ற பெண் மாபியாவின் வீட்டை குறிவைத்து காவல்துறையினர் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் போது அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ரூ. 56 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் 355 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கிய பல்வேறு சொத்துகளுக்குச் சொந்தமான ஆவணங்களும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி பொதுமக்களை சீரழித்து வந்த இந்த லேடி டானின் வீட்டில் இருந்த சொத்துக்களைக் பார்த்து காவல்துறையினரே ஆரம்பத்தில் அதிர்ந்து போயுள்ளனர். பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த இந்த முக்கியக் குற்றவாளியின் கைது நடவடிக்கையும், அவரது வீட்டில் சிக்கிய இந்த பிரம்மாண்டமான சொத்து மீட்பும் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

