முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மனு அளித்த பின்னரும் 2 மாதமாக நடவடிக்கை எடுக்காத திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார்
வீட்டை காலி செய்யக் கோரி தாக்குதல் புகார்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இரு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு…
திருச்சி பாலக்கரை பகுதியில் வசித்து வரும் ஹேமாவிதி என்பவர், குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யக் கோரி தனது கணவரின் சகோதரர்களான ஜெயகுமார், ராம்குமார், முத்துக்குமார் ஆகியோர் தன்னையும் தனது மகளையும் ஆபாச வார்த்தைகளால் கூறி தாக்கியதாக பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஹேமாவிதி மற்றும் அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புகார் அளிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்தாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காவல்துறையின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஹேமாவிதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ..
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் நிலையில், பாலக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட மனு ஆகியவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹேமாவிதி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்து இரண்டு மாதங்களாகியும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மனு அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

