Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்லூரி மாணவரிடம் லேப்டாப் திருடியவரை கைது செய்த திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

0

'- Advertisement -

கல்லூரி மாணவரிடம் லேப்டாப் திருடியவரை கைது செய்த திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

 

Ad banner

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அபினவ் (வயது 21,) திருச்சி தனலட்சுமி இஞ்சினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு Robotic Automation படித்து வருகிறார் இவர் கடந்த 15.09.26 அன்று தனது சொந்த ஊரான புனலூரில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் 16.09.26 அதிகாலை 0100 மணிக்கு திருச்சி வந்து இறங்கி நடைமேடை எண் 1A ல் உள்ள சிமெண்ட் கட்டையில் அயர்ந்து தூங்கி விட்டதாகவும்,அப்போது தனது லேப்டாப் அடங்கிய சோல்டர் பேக்கை யாரோ திருடி சென்று விட்டதாக திருச்சி இரும்பு பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் செல்வி கவிதா விசாரித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ( 24.09.26 ஆம் தேதி) ஜங்ஷன் வழி விடு முருகன் கோவில் ரவுண்டானா அருகே சந்தேக படும் படியாக சுற்றித்திரிந்த

 

தேனி மாவட்டச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் தங்கபாண்டி (வயது 36 )

என்பவர் மேற்கண்ட காணாமல் போன லேப்டாப் பேக்கை திருடியதை தங்கப்பாண்டி ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் கொடுத்ததால் கைது செய்து, லேப்டாப் பை கைப்பற்றி, திருச்சி நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.