மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் மாநில அமைப்பின் வழிகாட்டத்தின் படி நேற்று செவ்வாய்க்கிழமை 15.09.2026 காணொளி வாயிலாக நடைபெற்றது
. இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளரும் திருச்சி மாவட்ட தலைவரும்
சே* நீலகண்டன் தலைமையிலும் மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் முன்னிலையிலும் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.பேரியக்கம் இணைந்தததை திருச்சி மாவட்ட அமைப்பு முழு மனதோடு வரவேற்கிறது. மாநில அமைப்பு வழிகாட்டுதலின்படி தொடர்ந்து திருச்சி மாவட்டக்கிளை செயல்பட இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
2.பேரியக்கம் இணைந்ததை ஏற்றுக்கொள்ளும் விதமாக அனைத்து மாவட்டங்களும் மாவட்ட செயற்குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் அவர்கள் வலியுறுத்தியும் கூட்டத்தை கூட்டாமல், தன்னிச்சையாக செயல்பட்டு இயக்க ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் அவர்களை அப்பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மாநில அமைப்பை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது .திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களும் இயக்கம் இணைந்ததை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டிருக்கும் நிலையில், ஏதோ மாவட்ட அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று தவறான தகவல்களை பரப்பி வரும் மாவட்ட செயலாளர் திரு செல்வகுமார் அவர்களின் செயல்பாடுகளை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
3.மேலும்
வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறுகின்ற மாவட்ட செயலாளார்கள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளரை மாநில அமைப்பு அறிவிக்க வேண்டுமென்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது*.
4
அனைத்து வட்டாரக் கிளைகளும் உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடித்து மாவட்ட அமைப்பிடம் ஒப்படைப்பது தீர்மானம் நிறைவேற்றுகிறது.

5. திருச்சி மாவட்டத்தில் நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணி ஆணை வழங்கி நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதை உடனடியாக நிறுத்தி வைக்க இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முதல் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மாற்றுப் பணி வழங்கினால் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட பணி பாதிக்கப்படும். மேலும் பல்வேறு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு மாற்றுப் பணி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள்
ஏகமனதாக காணொளி காட்சி மூலம் நிறைவேற்றப்பட்டது .
இக்கூட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, திருச்சி நகரம், திருச்சி மேற்கு, திருவரம்பூர், ஸ்ரீரங்கம், வையம்பட்டி. தொட்டியம், துறையூர், மருங்காபுரி,
மண்ணச்சநல்லூர்,
தா பேட்டை,
முசிறி,.வட்டாரத்தின் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டப் பொருள் குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்
நிறைவாக மாவட்ட பொருளாளர் வே சிவகுமார் நன்றி உரையாற்றினார்

