திருச்சி கிழக்கு தொகுதியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தனித்துப் போட்டி நிறுவனத் தலைவர் வக்கீல் பொன். முருகேசன் அறிவிப்பு
திருச்சி கிழக்கு தொகுதியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தனித்துப் போட்டி நிறுவனத் தலைவர் வக்கீல் பொன். முருகேசன் அறிவிப்பு
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், கரூர் விராலிமலை உள்ளிட்ட ஏழு தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு
ஆதரவு தெரிவித்து வந்த மக்கள் மறுமலர்ச்சி கழகம் தற்போது இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இது பற்றி வழக்கறிஞர் பொன் முருகேசன் கூறும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். நீண்ட காலம் அவர்களுடன் பயணித்த போதிலும் எங்களுக்குரிய, எளிய மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை. ஆகவே திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தனித்து களம் காண்பது என முடிவு செய்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பதை எங்களது நோக்கம்.கல்வி சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு இளைஞர் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவோம்.
எங்களுக்கான மாற்றத்தை மக்கள் அளிப்பார்கள் என நம்புகின்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

