Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி அருகே குடிபோதையில் முன் விரோதம். இன்று விவசாயி குத்திக் கொலை .

0

'- Advertisement -

லால்குடி அருகே குடிபோதையில் முன் விரோதம். இன்று விவசாயி குத்திக் கொலை .

Ad banner

திருச்சி லால்குடி முள்ளால் மாரியம்மன் கோவில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 47) விவசாயி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே குடிபோதையில் நடந்த தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவரை சிலர் சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.  இதனால் நிலைகுலைந்த அபிமன்னன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குடி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் மற்றும் போலீசார சம்பவ இடம் விரைந்து சென்று அபிமன்னன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த கிராமத்தில் குடிபோதை தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த விவகாரத்தில் அபிமன்னனை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. விவசாயி சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இண்டு முள்ளால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.