திருச்சியில் ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் ?தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ……..
இன்று திங்கட்கிழமை (21.09.2026) காலை 5 மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் பாலக்கரை ரயில் நிலையத்திற்கும் கோட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே பேலஸ் தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளப்பாதையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற செம்மொழி விரைவு வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
இறந்தவர் மஞ்சள் கலர் பூப்போட்ட முழுக்கை சட்டையும், தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வேஷ்டியும் அணிந்துள்ளார். இறந்தவரின் உடலை கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சவக்கிடங்கில் வைத்து இருப்புப் பாதை காவல் ஆய்வாளர், வடக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

மேற்படி நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 94434 72524 மற்றும் 90805 63321

