Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே இன்று ஆண் நண்பருடன் டூவீலரில் சென்ற பெண் மீது அரசு பேருந்து மோதி பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சி அருகே இன்று ஆண் நண்பருடன் டூவீலரில் சென்ற பெண் மீது அரசு பேருந்து மோதி பரிதாப பலி

 

Ad banner

​பெரம்பலூர் புது ஆத்தூர், துறையூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த விஜயகீதா (வயது28) மற்றும் அவரது ஆண் நண்பரான சிறுவாச்சூரைச் சேர்ந்த குணசீலன் ஆகிய இருவரும்,

இருசக்கர வாகனத்தில் கம்பரசம்பேட்டை சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

​அப்போது, எதிரே குடந்தை கோட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்தை, டிரைவர் கிருபாகரன் (வயது27) என்பவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்ஸை ஓட்டி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விட்டது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர் இதையடுத்து அவர்களை

​ உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர்கள் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து கம்பரசம் பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.