மேகத்தாதுவில் அணைகட்ட கூடாது என வலியுறுத்தி திருச்சி வந்த விவசாயிகள் பிரச்சார பேரணியை வரவேற்ற அய்யாகண்ணு
மேகத்தாதுவில் அணைகட்ட கூடாது என வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் பிரச்சார பேரணி ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு.
மேகத்தாதுவில் அணைகட்டுவதை கைவிட வேண்டும், ராசிமணலில் அணையினைகட்டி தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சார பேரணி பயணம் கடந்த 20 ந் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொடங்கியது. இந்த பேரணி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த குழுவினர் இன்று திருச்சி வந்தனர். இந்தபேரணி குழுவினரை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் வரவேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே சிறிது தூரம் பேரணியாக சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

