Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12 வயது சிறுவனுடன் 2 ஆண்டுகளாக உல்லாசமாக இருந்த அம்மாச்சிக்கு காப்பு

0

'- Advertisement -

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் , இவரது பெற்றோர்கள் சமையல் ஆர்டர்கள் எடுக்கும் வேலை செய்து வருகின்றனர்.

Ad banner

எனவே கல்யாண சமயங்களில் அதிக வேலைகள் இருக்கும் என்பதால் சிறுவனை , லக்காபுரத்தில் உள்ள அவரது தாயின் அம்மா (பாட்டி ) வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று சிறுவன் பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வற்புறுத்திய போது அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் பதட்டமாக காணப்பட்டுள்ளார்.

இதனை கவனித்த சிறுவனின் தாய் பாட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன் ? மற்றும் ஏன் இவ்வளவு பதட்டமடைகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுவன் அழுது கொண்டே அவரது பாட்டி சிறுவன் 6 ஆம் வகுப்பு படித்தது முதல் தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது மகனிடம் பாலியல் ரீதியாக அத்து மீறி நடந்து கொண்டதாக கூறப்படும் தனது தாயார் மீது ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று “ஏன் இப்படி பண்ணீங்க ” என கேட்டு சண்டையிட்டிருக்கிறார்.

தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுவனின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

சிறுவனுடன் பாட்டியே உல்லாசமாக இருந்த தகவல் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.