ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுபவர்களைபுரோக்கர் என்பதை நில முகவர் என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொது குழுவில் தீர்மானம்

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் வியாபாரிகளையும் புரோக்கர் என்று அழைப்பதைத் தவிர்த்து, நில முகவர் என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடவேண்டும்
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் தீர்மானம் ..
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2-வது பொதுக்குழு செயற்குழு கூட்டம் திருச்சி முதலியார் சத்திரம் கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்
இச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மலேசியா ஆர்.மணி, மாநில செயலாளர் இன்ஜினியர் வி.வீரமணி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
மாநில கூடுதல் செயலாளர் டி.பக்கிரிசாமி,
மாநில அவைத் தலைவர் எஸ்.அமிருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பேரமைப்பு மாநகர செயலாளர் பரணிபவன் ஹோட்டல் வி.பி. ஆறுமுகப்பெருமாள்,இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கே.எம்.எஸ் மொய்தீன்,வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சுமதி பப்ளிகேஷன் ஆர்.வி. ஹரி ஹரூன் பிள்ளை,
ராக்போர்ட் டைம்ஸ் லட்சுமி நாராயணன்,
டெல்லி கிச்சன் முருகேசன் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநிலத் தலைவர் எம் கே கமலக்கண்ணன் பொன்னாடை அணிவித்து கௌரவித்து,நினைவு பரிசுகள் வழங்கினார்.
கூட்டத்தில் மாநில கவுரவத் தலைவர்,திருச்சி மாவட்ட வியாபார கழக நிர்வாக குழு உறுப்பினர் பி. மகாலிங்கம் பிள்ளை,மாநில இணைச்செயலாளர்,வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் காளிமுத்து,மாநிலத் துணைத் தலைவர் பாலு பிள்ளை,மாநில மகளிர் அணி தலைவி கவிதா கண்ணன்,செயலாளர் பேபி ஜெயக்குமார்,திருச்சி மாவட்டம் மகளிர் அணி தலைவி பர்வீன் அமிர்தீன்,கிழக்கு மாவட்ட தலைவர் பிரதீஷ்,மாவட்டச் செயலாளர் பவித்ரன்,
திருச்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன்,மாவட்டச் செயலாளர் வசந்தகுமார்,மாவட்ட பொருளாளர் சந்திரமோகன்,மாநகரத் தலைவர் கண்ணதாசன்,மாநகரச் செயலாளர் பாலமுருகன்,மாநகரப் பொருளாளர் சையது முஸ்தபா,இளைஞரணி மாவட்ட தலைவர் ஸ்ரீதரன்,
உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது … அதன் விவரம் வருமாறு:-
கட்டுமானத் தொழிலுக்ககு அத்தியாவசமான மணல், செங்கல், டைல்ஸ், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் தொடர் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவை நனவாக்க அரசு உடனடியாக உரியக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்,
அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து, சாதாரண மற்றும் நடுத்தர குடிமக்கள் சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்கும் வகையில், அரசு தரப்பிலேயே முறையான வீட்டு மனைப் பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், முகவர்கள் மற்றும் பொறியாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க தனிநல வாரியம் அமைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் வியாபாரிகளையும் புரோக்கர் என்று அழைப்பதைத் தவிர்த்து, நில முகவர் என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடவேண்டும். பொதுமக்களுக்குப் பயனுள்ள ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் அன்றாடம் பொதுமக்கள் சந்திக்கும் தொழில்நுட்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து, துறை சார்ந்த பிரச்சனைகளை மாதந்தோறும் பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகள் மீதான அரசின் கவனத்தை ஈர்க்க, தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முடிவில் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எஸ் கே சங்கர் நன்றி கூறினார்.

