Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் ரமேஷின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் தவெகவினர்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகில் வாசன் சிட்டி மூன்றாவது கிராஸில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷின் தொகுதியில் அரசின் புறம்போக்கு நிலம் அவரது பெயரைக் கூறி ஆக்கிரமிப்பு முயற்சி….

 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி மூணாவது கிராஸ் அருகில் 31/2 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது .இந்த இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் அரசு அனுமதியுடன் கோயில் கட்ட முயற்சி செய்து வந்து இருந்தனர் ..இந்த நிலையில் இந்த இடத்தை சிலர் தாங்கள் அறநிலையத்துறை அமைச்சருக்கு வேண்டியவர்கள் எனக்கூறி அந்த இடத்தை பொக்லின் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது இது எங்களுக்கு சொந்தமான இடம் என அவர்கள் கூறியுள்ளனர் ..இது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என மல்லியம்பத்து ஒன்றிய கிளர்க்கிடம் புகார் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை …அவரும் வேண்டியதை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக பேசி வருகிறார் என அப்பகுதி இப்போது மக்கள் கூறுகின்றனர் ..

தற்போது இடத்தை சுத்தம் செய்து வரும் நபர்கள் நாங்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் நீங்கள் எங்கு புகார் அளித்தும் ஒன்றும் செய்ய முடியாது என தெனாவட்டாக பேசி தற்போது அரசு புறம்போக்கு இடத்தை சுத்தம் செய்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.

எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் சிட்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.