
திருச்சி சோமரசம்பேட்டை அருகே மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது
சோமரசம்பேட்டை காவல் சரக்கத்திற்குட்பட்ட இரட்டை வாய்க்கால் பகுதியில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் மெத்தம்பேட்டமைன் என்ற உயர்ரக போதை பொருள்
பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.இதன் மதிப்பு தெரியவில்லை … மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில்
அவர்கள் திருச்சி ஜீவா நகர் அண்ணா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பதும் தென்னூர் சங்கீதாபுரம் பகுதியை சேர்ந்த விமல் தாஸ் (வயது 36) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களை கைது செய்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

