Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு முதியவர் மாயம்.

0

'- Advertisement -

திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு முதியவர் மாயம். மனைவி போலீசில் புகார்

Ad banner

மியான்மர் நாடு யாங்கூன் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 65) இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டில் இருந்து தனது மனைவி வாசுகி உடன் கடந்த 15 ந் தேதி திருச்சிக்கு வருகை புரிந்த ரர். பிறகு கேகே நகர் பகுதியில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் இருவரும் தங்கி விட்டு நேற்று முன்தினம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு மனைவி வாசுகி உடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் திருமணம் மண்டபத்தில் இருந்து முத்து திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.இது தொடர்பாக வாசுகி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செசன்ஸ் கோட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முத்துவை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.