கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வயலூர் ரோடு , புத்தூர் பகுதிஅனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் கூட்டத்தில் தீர்மானம் .
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வயலூர் ரோடு , புத்தூர் பகுதிஅனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் கூட்டத்தில் தீர்மானம் ..
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ‘தரைக் கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்றி தருவதாக கூறி மாநகராட்சி உதவி ஆணையர் ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தார். தரைக் கடைகளை அகற்ற, ஒரு வாரம் கழித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 300-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளை அனைத்து கடைக்காரர்களும் மெயின் ரோட்டில் நடைபாதை, கடை போட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தலைவர் ஆர் காளிமுத்து, செயலாளர் எம் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணை தலைவர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

