Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கேர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

0

'- Advertisement -

புதிய கனவுகளுடன் தொடங்கும் புதிய பயணம் – கேர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

 

Ad banner

புதிய கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் கல்லூரிப் பயணத்தைத் தொடங்கும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், கேர் பொறியியல் கல்லூரியில் 2026–27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

 

விழாவிற்கு கல்லூரி நிறுவனர் பிரித்வி செந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் S. சாந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவில் கேர் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணம் மற்றும் சாதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து கல்லூரியின் தலைமைக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

 

கல்லூரி நிறுவனர் அவர்களின் உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில், மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து பயனுள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

புதிய தலைமுறையின் கனவுகளுக்கு நம்பிக்கையூட்டி, வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் தொடக்கமாக இவ்விழா அமைந்தது. விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.