ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை .
திருச்சி திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை குமரன் நகர சேர்ந்தவர் கிரிதரன் (வயது 40) இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் மனோஜ் குமார் (வயது 14) என்பவர் உதவியளராக வேலை பார்த்துக்கொண்டு வந்தார்.மனோஜ் குமார் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டு வேலைக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் அகிலாண்டேஸ்வரி நகர் விஸ்தரிப்பு பகுதியில் ஒரு வீட்டில் இருவரும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது வீட்டின் மாடியில் இருந்து கிரிதரன் மற்றும் மனோஜ் குமார் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் மனோஜ் குமார்,கிரிதரன் இருவரும் தலையில் பலத்த காயமடைந்துஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் மனோஜ் குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ..

