Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க நூல் வெளியீட்டு விழா .

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க  நூல் வெளியீட்டு விழா!  திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா  திருச்சிராப்பள்ளி கலையரங்கம் முதல் தளம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

Ad banner

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சிறப்புத்தலைவர் அரிமா.சௌமா.இராஜரெத்தினம் தலைமை வகித்தார் பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன், கவிஞர் கோவிந்தசாமி, துணைத்தலைவர்  குர்யா சுப்பிரமணியம், அரிமா.பா.முகமதுஷ்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .. பிடித்த கவிதை தலைப்பில் கவி செல்வா,நந்தவனம் சந்திரசேகர், முனைவர் சதீஷ் உள்ளிட்டோரும் பிடித்த கதை தலைப்பில் த.இந்திரஜித், ஆங்கரை பைரவி, முனைவர் இரா. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.

பொதுச்செயலாளர் வை.ஜவஹர் ஆறுமுகம். சிறப்புரையாளர் குறித்து அறிமுக உரையாற்றினார்.“திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்” தொகுப்பு நூலினை  சேவை கோவிந்தராஜ் வெளியிட பொறியாளர் கவிஞர் சுப்யையா. ரெ. மதனா.முகமது சித்திக் ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் மேனாள் தலைவர் அகத்தியன் ஜான் பெனடிக்ட் “தமிழர்களே, தமிழில் பேசுவோம் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் சலேத் நிகழ்வுகளை நெறியாள்கை செய்தார்.முன்னதாக பொதுச் செயலாளர் ஜவகர் ஆறுமுகம் வரவேற்க நிறைவாக நூலாசிரியரும் சங்க செயலருமான

யோகாசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.