Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வார்டிலியே இந்த நிலை .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பல்நோக்கு சேவை மையம் .யார் நடவடிக்கை எடுப்பது ?பொதுமக்கள் வேதனை

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வார்டிலியே இந்த நிலை .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பல்நோக்கு சேவை மையம் .யார் நடவடிக்கை எடுப்பது ?

திருச்சி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி, சேவை வரி உள்ளிட்ட வரி இனங்களை கட்ட சேவை மையங்கள் குறைவாக இருக்கிறது.

இதனால் சேவை மையங்களில் பொதுமக்கள் வரிகளை கட்ட நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பொதுமக்கள் தங்களை சந்திக்க கவுன்சிலர் அலுவலகம் வேண்டும் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் அலுவலகம், வரி கட்டும் அலுவலகம்,சுகாதார ஆய்வாளர் அலுவலகம்

உள்ளவற்றை அடங்கிய பல்நோக்கு சேவை மையத்தை கட்ட நடவடிக்கை எடுத்தனர்.  இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் இறுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வார்டுகளிலும், பல் நோக்கு சேவை மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 27 வது வார்டு பாபு செட்டி தெருவில் கடந்த மார்ச் மாதம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பல் நோக்கு சேவை மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது.

இதனை திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். இந்த வார்டு மேயர் அன்பழகன் வார்டு ஆகும். இந்தக் கட்டிடத்தில் பல்நோக்கு சேவை மையம், கவுன்சிலர் அலுவலகம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், மேஸ்திரி அலுவலகம் என நான்கு அறைகள் கட்டப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த கட்டிடம் திறக்கப்பட்டது.ஆனால் செயல்படவில் லை. சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்து 100 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னமும் அந்த பல்நோக்கு சேவை மையம் செயல்படாமல் இருக்கிறது. இதனால் அந்த கட்டிட வளாகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து பேசுவது,மது குடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாபு செட்டி தெருவில் மின்விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதால் சமூக விரோதிகள் அதனை பயன்படுத்தி கட்டிடத்தில் அமர்ந்து தூங்குகின்றனர்.

தற்பொழுது எல்லா வசதிகளுடன் இருக்கும் பல் நோக்கு சேவை மையத்தை உடனடியாக மாநகராட்சி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மற்ற வார்டுகளில் இந்த நிலை என்றால் மாநகராட்சி மேயரிடம் கூறலாம் மேயரின் வார்டிலியே இந்த நிலை என்றால் யாரிடம் சென்று புகார் தெரிவிப்பது அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.